இந்தியன் (Hindusthani)

“ஒன்றே குலம், ஒருவனே தேவன். பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.” -தாயுமானவர்

உருவ வழிபாடு பகுத்தறிவில்லை எனும் பித்தலாட்டம்

செய்தி

என்று பெரியாருக்கு சிலை வைத்தனரோ அன்றே அவருடைய பகுத்தறிவு கொள்கைகளுக்கு மூடு விழா நடத்திட்ட கழக கண்மணிகள், அவருடைய புகழை எல்லா மீடியாக்களிலும் அர்ச்சனை செய்வது, பிறந்த நாள் அன்று மாலை போடுவதென்று (தனிமனித வழிபாடு) அவருக்கு சமாதியே கட்டி விட்டனர்.


விளக்கம்: உருவ வழிபாடு ஏன் தோன்றியது? ஏன் பகுத்தறிவு வாதம் தோற்றது?

உண்மை சத்தியத்தை (இறைவன்) விரல்கள் (சிலைகள்) சுட்டி காட்டும் திசையில் தேடுங்கள். விரல்களில் அல்ல.
- ஓஷோ

  1. மடையனோ கல்லிலும், மண்ணிலும், கட்டையில் மட்டுமே இறைவன் சக்தி தாங்கி இருப்பதாக கூறுகிறான்.
  2. மூர்க்கனோ இக்கல்லையும் கட்டையையும் உடைத்து அதில் பௌதீகமாக (physical) அதே சக்தியை தேடும் மிகப்பெரும் அறிவாளி?
  3. ஞானியோ பிரபெஞ்சமெங்கும் உள்ள உண்மை சத்தியத்தை உருவமாக அதே கல்லில் காண்கிறார். (விளக்கம்: Cosmic dance at CERN- நடராசரும் பிரபஞ்ச இரகசியமும்)

இன்று உருவ வழிபாட்டை இந்து மதத்தின் பிற்போக்குதனம் என்று கூறுபவர்களில் எத்தனை பேருக்கு இந்து மதம் தான் அருவ வழிபாட்டை முதலில் தோற்றுவித்தது என்பது தெரியும்?

இன்று அணைத்து மக்களாலும் (மதம், மொழி, நாடு கடந்து) கடை பிடிக்கபடும் தியானம் (Yoga) என்பது அருவ வழிபாட்டின் எளிய வடிவம் தான்.

அர்ஜூனன்: இறைவா, வழிபாடுகளில் சிறந்தது எது? எது பக்குவமானது? உருவுடன்கூடிய உமக்கு பக்தித் தொண்டாற்றுவதா அல்லது தோன்றாத அருவ பிரம்ம பாதையை ஏற்பதா?
பகவான்:புலப்படாததும், எங்கும் நிறைந்ததும், மனதுக்கு எட்டாததும், மாறாததும், அசையாததும், நிலைத்ததும், அழியாததுமான அருவப் பிரம்மத்தை ஏற்று வழிபடுவோர் சமநோக்குடையவராய், எல்லா ஜீவர்களின் நலனிலும் ஈடுபட்டு என்னை அடைகின்றனர்
ஆனாலும் உடலுடைய வாழ்வில், அருவத்தன்மை இயல்பிடம் மனதை வைத்து முன்னேறும் பாதை மிகக்கடினமானது. எனது திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில் ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.
-பகவத் கீதை – அத்தியாயம் 12 – பக்தி யோகம்

தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம ஏழாம் தந்திரம் 1738

இவற்றிலிருந்து உருவ வழிபாடும் அருவ வழிபாடும் ஆரம்ப நாள் கொண்டே இந்து மதத்தின் பிரிக்க முடியாத ஒன்றாக் இருந்தது என்பதையும், கடவுள் எனும் சத்தியம் எங்கும் நிறைந்திருந்தும் மக்களுக்கு எளிய வழியில் உணர்த்தவே நம் முன்னோர்கள் உருவ வழிபாட்டை மக்களுக்கு வழங்கினர் என்பதையும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன?
மனிதன் எந்த ஒரு விஷயத்தையும் தனது புலன்களின் (கண், காது, மூக்கு, வாய், உடல்) வழியாக உணர விரும்பிகிறான். இறைவனை மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம். உருவ வழிபாடு என்பது ஆரம்ப நிலை மக்களுக்கு மட்டுமே அவசியம் ஆனது ஆகும். இறைவன் அதையும் தாண்டி அருவ நிலைலும் உள்ளான். இதை உணர்த்தவே இறைவன் இலிங்க வடிவிலும் புரிகிறான்.

இதற்கு வள்ளலாரின் வாழ்க்கை மிகச்சிறந்த உதாரணமாகும். ஒவ்வொரு இந்து துறவியும் இராமகிருட்ணர் முதல் இரமணர் வரை இதே வழி முறைபடியே (உருவ வழிபாடு, தியானம், சமாதி) மெய்ஞானம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

1. முதலில் அவர் பரம்பொருளை நடராஜர் உருவில் வழிபட்டார்.
2. ஆடுத்த படி நிலையாக உலகெங்கிலும் உள்ள பரம் பொருள் எல்லா வடிவங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதை அறிந்து தியானத்தை கடைபிடித்தார்.
3. பின்பு உள்ளொழி பெற்றதின் அடையாளமாக ஜோதி மார்கத்தை அருளினார்.

சிலைகள் உடைப்பு போராட்டத்தின் நன்மைகள் :-) )

உண்மையிலேயே சிலைகள் உடைப்பு போராட்டங்கள் தான் பெருவாரியான மக்களுக்கு உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன என்பதை உணர வைத்துள்ளன. உருவ வழிபாட்டையும் தாண்டி அருவ வழியிலும் இறைவன் உள்ளான் என்ற தமிழ் வேத‌ ஆன்மீக தத்துவத்தின் மூல கருத்தினை உணர வைத்துள்ளன.

இதில் கவனிக்க வேண்டியாய விடயம் இவர்களின் நோக்கம் எல்லாம் நமது நாட்டு பழக்க வழக்கங்களை கேலி செய்ய வேண்டும் என்பது தான் என்ற போதிலும் விளைவுகள் நன்மையாகவே முடிந்தது என்பது தான்.

சிலர் இறைவன் என்பதற்கு உருவம் இருக்க முடியாது என்ற கருத்தை கூறுகின்றனர். அவர்களின் தத்துவத்தின் படியே கொண்டாலும் எல்லா உயிர்களையும் உருவங்களாக படைத்த இறைவன் தான் விரும்பிய போது தனக்கே ஓர் உருவம் கொள்ள மாட்டான் என்பது தான் கேலி கூத்தானது ஆகும்.

உருவ வழிபாட்டை முழுமையாக எதிர்க்கும் மதங்களும் கூட மக்களை ஒரு நிலை படுத்த சின்னகங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்துகின்றன என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. பெரியார் சிலை, அண்ணா சிலை, தர்காவில் இருக்கும் சமாதி, கிறிஸ்தவர்களின் சிலுவை, ஏசு சிலை, மேரி சிலை, மாதா கோவில் தேரோட்டம், புத்தர் சிலை, மகாவீரர் சிலை இவை உணர்த்துவது ஒன்று தான், எவ்வளவு தான் சத்தியத்தை புறக்கணிக்க நினைத்தாலும் அது விசாலமான தனது கரங்களால் அணைத்துக் கொள்ளும்.

Filed under: இந்து அறிவியல் , ,

8 Responses

  1. அப்துல் ஸலாம் says:

    தங்கள் தளம் கண்டேன். நான் ஒரு முஸ்லிம் (உருவ வழிபாட்டை ஆதரிப்பவன் அல்ல) என்றாலும் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் மிக அழகாகச் சொல்லியிருக்கும் தங்கள் உயரிய பண்பாட்டை மிகவும் நேசிக்கிறேன். தங்களைப்போன்ற நல்லோர்கள் இந்து மதக் கருத்துக்களை அழகாக எடுத்துச் சொல்வதில் இந்து மதம் பெருமை அடைகிறது. ஒரு சிறு பிழை தங்கள் பதிவில் கண்டேன்.
    //உருவ வழிபாட்டை முழுமையாக எதிர்க்கும் மதங்களும் கூட மக்களை ஒரு நிலை படுத்த சின்னங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்துகின்றன என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. //
    என்னும் வரிகளைத் தொடர்ந்து
    //தர்காவில் இருக்கும் சமாதி//
    எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    தர்கா எனப்படும் சமாதிகள் இஸ்லாத்துக்கு புறம்பானவை.வாழ்ந்து மறைந்த நல்லவர்களை அடக்கம் செய்து அதன் மூலம் சிலர் வயிறு வளர்க்கின்றனர்.
    உண்மையாண இஸ்லாமிய வழிபாட்டுத் தளம் என்பது பள்ளிவாசல்கள் எனப்படும் இறையில்லங்கள். பள்ளிவாசல்களில் எந்த உருவமும் இருக்காது.
    இறைவன் நமது கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். அவன் எபப்டி இருப்பான் என்பதை எவருமே கண்டதில்லை. காணாத ஒன்றை அல்லது ஒருவனை எபப்படி கற்பனையில் வடிக்க முடியும் என்று தான் இஸ்லாம் சொல்கிறது.
    தங்களின் அருமையான ஒரு ஆக்கத்தில் தங்களை அறியாமல் இத்தவறு ஏற்பட்டிருப்பதால் ஒரு முஸ்லிம் சகோதரன் என்ற முறையில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளேன்.

  2. வீரன்(Veeran) says:

    வாங்க சகோதரரே!

    முதலில் தங்களின் தர்கா பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

    //அவன் எப்படி இருப்பான் என்பதை எவருமே கண்டதில்லை. காணாத ஒன்றை அல்லது ஒருவனை எபப்படி கற்பனையில் வடிக்க முடியும் என்று தான் இஸ்லாம் சொல்கிறது.

    நண்பரே இறைவனை இத்தனை வருடங்களாக (யுகங்களாக) ஒருவருமே உணரவில்லையா ?
    இப்போதும் உணர முடியாதா?
    இனிமேலும் யாரும் உணர முடியாதா ?
    இவ்வாறு கூறினால் இறைவனே இல்லை என்பதற்கு ஒப்பாகாதா ?

    இஸ்லாம் தாங்கள் கூறுவது போல் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களை கற்பிப்பதாக கருதவில்லை. உண்மையில் நபிகள் ஒரு சில முட்டாள்கள் கூறுவதை போன்ற கல்லிலும், மண்ணிலும், கட்டையிலும் இறைவன் சக்தி தாங்கி இருப்பதாக கூறுவதையும் அதனால் வயிறு வளர்ப்பதையுமே கண்டித்தார்.

    இறைவன் இல்லாத இடமே இல்லை. அவன் எங்கும் நிறைந்து இருக்கிறான். எந்த உயிரையும், பொருளையும் தாழ்வாக நினைக்க கூடாது. இதை நினைவுணர்த்தவே அவர் கரு நிற கல்லை (சிவலிங்கத்தை) முஸ்லிம்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது வணங்க ஆணை இட்டுள்ளார்.

    //உண்மையாண இஸ்லாமிய வழிபாட்டுத் தளம் என்பது பள்ளிவாசல்கள் எனப்படும் இறையில்லங்கள்.
    பள்ளிவாசல்களில் எந்த உருவமும் இருக்காது.

    மெக்கா மசூதி மற்றும் ஹஜ் பயணம் பற்றி நான் உங்களுடன் மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!!!

    1. மொட்டை அடித்து கொண்டு, 2. வெண்மை உடை உடுத்தி, 3. வாழ்வில் ஒருவரையாவது மேற்கொள்ளும் புனித பயணம் (துறவு நிலை)
    4. மெக்கா அருகில் உள்ள நதியில் நீராடல் (புனித நீராடல்)
    5.சாத்தனின் மேல் கல்லெறிதல் (தீயவற்றை அழிக்கும் சடங்கு )
    6.கல்லை தர்காவில் வைத்து முஸ்லிம்கள் அனைவரும் இடது புறமாக சுற்றி வருதல் (கோவிலை சுற்றி வலம் வருதல்)
    7.கல்லை முத்தமிடல் (சிலையை வணங்குதல்)

    வட்ட வடிவ பாத்திரத்தில் கருப்பு நிற கல்லை வைத்தால் என்ன வடிவம் தோன்றும் -சிவலிங்கமா ? இல்லையா ? கப்பா என்ற அரபி சொல் கருமை என்ற அர்த்தம் கொண்டது. இது சிவம் (கருமையை) அடிப்படையாக கொண்டதல்லவா?

    இவையெல்லாம் இந்து மதத்தை அடிப்படையாக கொண்டவை என்பது எல்லோருக்கும் புரிந்தாலும்
    அவற்றை ஏற்றுக் கொள்ள சிலருக்கு மனம் இடம் தரவில்லை அல்லவா?

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

  3. அப்துல் ஸலாம் says:

    //நண்பரே இறைவனை இத்தனை வருடங்களாக (யுகங்களாக) ஒருவருமே உணரவில்லையா ?
    இப்போதும் உணர முடியாதா?
    இனிமேலும் யாரும் உணர முடியாதா ?
    இவ்வாறு கூறினால் இறைவனே இல்லை என்பதற்கு ஒப்பாகாதா ?//

    இறைவனை யாருமே உணரவில்லை என யார் சொன்னது? இறைவனை அனைவருமே உணருகின்றனர். இப்பரந்த பேரண்டம், உயிரினங்களின் அமைப்பு, இப்படி அனைத்துமே இறைவன் இருக்கின்றான் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. உணருதல் என்பது வேறு காண்பது என்பது வேறு. இதமாக நம் மேனியை வருடும் தென்றல் காற்றை, சுகந்தமான மலரின் நறுமணத்தை வலியை வேதனையை உணர்கிறோம். ஆனால் இவை எவற்றையும் நான் காணவில்லை. இவற்றுக்கு நாம் உருவம் கொடுக்க முடியுமா? அதுபோல இறை ஆற்றலை உணருகிறோம் ஆனால் இறைவனை யாரும் கண்டதில்லை. காணாததற்கு எப்படி உருவம் கொடுக்க முடியும்?
    உங்களை நான் நேரில் பார்த்தில்லை. உங்கள் படத்தை நான் எப்படி வரைய முடியும்?
    //
    இதை நினைவுணர்த்தவே அவர் கரு நிற கல்லை (சிவலிங்கத்தை) முஸ்லிம்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது வணங்க ஆணை இட்டுள்ளா//
    கஃபா என்னும் இறையில்லத்தில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்லை சிவலிங்கம் என்று யார் சொன்னது?
    அதனை வணங்க வேண்டும் என் நபிகள் நாயகம் ஒருபோதும் சொன்னதில்லையே.
    உங்கள் எழுத்துக்களை கவனிக்கும்போது நீங்கள் ஒரு நல்ல இந்து என்று உங்களை உயர்வாக மதிக்கிறேன். ஆனால் இந்த கருப்புக்கல்லை ‘சிவலிங்கம்’ என கூறித் திரிவது வேறு ஏதோ ஒரு கூட்டத்தின் அவதூறாயிற்றே இதற்கு நீங்கள் எப்படி ஆட்பட்டீர்கள்?
    அந்தக் கருப்புக்கல் சுவர்க்கத்திலிருந்து வந்த கல் என்பதைத் தவிர அதற்கு எந்த முக்கியத்துமும் இஸ்லாத்தில் இல்லை.
    இஸ்லாமிய அரசின் இரண்டாம் ஜனாதிபதியாகிய உமர் அவர்கள் கஃபாவை வலம் வரும்போது தம் கையில் இருந்து தடியால் இந்தக் கல்லை தட்டி ‘நீ ஒரு கல் என்பதையும் உனக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதையும் நான் அறிவேன் எனது தலைவர் நபிகள் நாயகம் உன்னை முத்தமிட்டிருக்காவிட்டால் நானும் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ என்றார்கள். அந்தக் கல்லுக்கு அவ்வளவு தான் மதிப்பு. வேறு எந்த முக்கியத்துவமும் இஸ்லாத்தில் இல்லை.
    //வட்ட வடிவ பாத்திரத்தில் கருப்பு நிற கல்லை வைத்தால் என்ன வடிவம் தோன்றும் -சிவலிங்கமா ? இல்லையா //
    அந்தக் கல் சிவலிங்கத்தின் வடிவிலா இருக்கிறது? அப்படியானால் அந்தக் கல்லை நீங்கள் பார்க்கவில்லை அல்லது சிவலிங்கத்தை நீங்கள் பார்தததில்லை என்றே தோன்றுகிறது
    // கப்பா என்ற அரபி சொல் கருமை என்ற அர்த்தம் கொண்டது. இது சிவம் (கருமையை) அடிப்படையாக கொண்டதல்லவா?//
    கஃபா என்றால் கருமை என்று உங்களுக்கு யார் சொனது?
    //மெக்கா அருகில் உள்ள நதியில் நீராடல் (புனித நீராடல்)//
    உங்கள் எழுத்துக்களைப் பார்த்தபோது ஒரு புறம் உங்களுடைய தவறான புரிதல்களுக்காக உங்கள் மீது கவலை வந்தது. இதைப்பார்த்தபோது சிரிப்பு வந்தது.
    மக்கா நகரம் உள்ள சவுதிஅரேபியா நாட்டிலேயே நதி இல்லை என்னும் பூகோள உண்மை கூட தெரியாமல் எப்படி எழுதுகிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

    முழுக்க முழுக்க தவறாகவே அனைத்தும் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.
    வடலூர் வள்ளலார் அய்யா இராமலிங்க அடிகளாரின் புகழ் பரப்பும் அருமையான பணியைச் செய்து கொண்டிருக்கிறீகள். அதை அழகாகச் செய்து கொண்டிருங்கள்.
    இஸ்லாத்தைப் பற்றி எழுதும்போது தயவு செய்து கொஞ்சம் கவனமாக எழுதுங்கள். பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றாலே தாங்கள் இன்னும் இஸ்லாம் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள்வில்லை என்று பொருள்.தங்களைப் போன்ற நல்ல ஆன்மீக வாதிகள் தங்கள் எழுத்துக்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
    எமது கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்
    அன்புடன்
    முஸ்லிம் சகோதரன்
    அப்துல் ஸலாம்

  4. வீரன்(Veeran) says:

    அன்பு சகோதரரே!

    தங்களது விளக்கத்திற்கு நன்றிகள்!

    //கருப்புக்கல்லை ‘சிவலிங்கம்’ என கூறித் திரிவது வேறு ஏதோ ஒரு கூட்டத்தின் அவதூறாயிற்றே இதற்கு நீங்கள் எப்படி ஆட்பட்டீர்கள்?

    இன்னும் சிவலிங்கத்தை பற்றிய தேவையான விளக்கம் பரவாததே அவதூறு எனக்கூறுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

    உண்மையில் சிவலிங்கம் என்பது இந்துக்களுக்கு உரிய வழிபாட்டு உருவம் மட்டும் அல்ல. சிவலிங்கம் என்பது ஒரு

    1. பருப்பொருளும்(Physical Structure-சிவம்), ஒரு சக்தியும் (Power- சக்தி) சேர்ந்தே இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும்(ஒரு சிறிய அணு முதலானவை முதற் கொண்டு) அமைந்து இருக்கிறது,
    2.ஒவ்வொரு உயிரும் ஓர் ஆண் சக்தியையும் ஒரு பெண் சக்தியையும் அடிப்படையாக கொண்டே பிறக்கிறது என்பதையும்,
    3. அதே போல் ஒவ்வொரு உயிரும் ஓர் ஆண் சக்தியையும் ஒரு பெண் சக்தியையும் ஒரு சேர தன்னகத்தே கொண்டுள்ளது

    எனும் அறிவியல் உண்மையை எடுத்து காட்டவே நம் முன்னோர்களான இந்தியர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    //எமது கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

    வலைப்பூக்கள் எனும் அருமையான விஞ்ஞானம் நம்மை போன்ற பல்வேறு கருத்துக்களை கொண்டவர்களையும் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அருமையான வாய்ப்பை வழங்கி உள்ளது. இதில் மனதைப் புண்படுத்துவதாக நான் எதையும் கருதவில்லை. தாங்களும் இதைப் போன்றே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    மேலும் தங்களுது கருத்துக்களுக்கு விரிவாக எழுத வேண்டியுள்ளதால் விரைவில் தனி பதிவாக இடுகிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

  5. அப்துல் ஸலாம் says:

    //1. பருப்பொருளும்(Physical Structure-சிவம்), ஒரு சக்தியும் (Power- சக்தி) சேர்ந்தே இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும்(ஒரு சிறிய அணு முதலானவை முதற் கொண்டு) அமைந்து இருக்கிறது,
    2.ஒவ்வொரு உயிரும் ஓர் ஆண் சக்தியையும் ஒரு பெண் சக்தியையும் அடிப்படையாக கொண்டே பிறக்கிறது என்பதையும்,
    3. அதே போல் ஒவ்வொரு உயிரும் ஓர் ஆண் சக்தியையும் ஒரு பெண் சக்தியையும் ஒரு சேர தன்னகத்தே கொண்டுள்ளது//
    அறிவியல் கருத்தக்களைச் சரியாக எழுதியிருக்கிறீர்கள். அது சரி அப்புறம் அடைப்புக் குறிக்குள் (சிவம் சக்தி) இது எங்கிருந்து வந்தது.
    சிவலிங்கத்தப் பற்றி விளக்கம் அளித்திருந்தீர்கள். ஆனால் நாத்திக நணபர்கள் வறுவிதமான விளக்கம் தருகின்றனர் அவர்கள் கூறுவது தவறானதா? சரியானதா எனக்குத் தரியாது தாங்கள் விள்க்கவும்

  6. வீரன்(Veeran) says:

    //அது சரி அப்புறம் அடைப்புக் குறிக்குள் (சிவம் சக்தி) இது எங்கிருந்து வந்தது.

    தங்களின் தமிழறிவை மேம்படுத்தி கொள்வது இத்தகைய எளிய கேள்விகளுக்கான அவசியமே இல்லாமல் செய்து விடும். இவை தமிழ் மதத்தின் அடிப்படையான திருமந்திரம் முதலான ஆகமங்கள் படித்தவர்களுக்கு தெரியும்.

    சிவன் – ஜீவன் என்ற சொல்லின் சுத்த தமிழ் வடிவம். இது பருப்பொருளை குறிக்கிறது.
    சக்தி – எனும் சொல்லின் நேரடி ஆங்கில வடிவம் power தான்.

    சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதற்கு இது தான் அர்த்தம்.
    “physical structure can’t be stable with out power. Power is produced by physical structure.”

    உங்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள நாத்திகர்களின் முகவரி தான் தெரியுமல்லவா ? இஸ்லாமிய நாத்திகர்களின் முகவரி சில
    1. islam-watch
    2. 1000+ Mistakes in the Quran

  7. வீரன்(Veeran) says:

    1. முதலில் இப்போதும் மெக்காவில் கருங்கல்லால் ஆன் ஒரு உருவத்தை வைத்து உள்ளதை ஒப்பு கொள்கிறீர்கள்.
    2. இரண்டாவது நபிகள் நாயகம் அதன் மேல் மிக உயரிய மதிப்பு வைத்து இருந்ததையும் அதை முத்தமிட்டு தன்னுடைய ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தியதையும் ஒத்து கொள்கிறீர்கள்.
    3. மூன்றாவது ஹஜ் செல்லும் எல்லோரும் இப்போதும் அதை சுற்றி வருவதையும், ஒவ்வொரு இஸ்லாமியரும் இதை செய்தே ஆக வேண்டும் என்பதையும் ஒப்பு கொள்கிறீர்கள்.

    4. நான்காவது உங்களுக்கு தெரியாத விசயமாக இருக்கலாம். சமீப காலம் வரை ஹஜ் பயணம் செய்த ஒவ்வொருவரும் இக்கல்லை முத்தமிட்டு வந்துள்ளனர். இப்போது
    பக்தர்களின் கூட்டம் அதிகமென்பதால் அந்த அதிர்ஷ்டம் கிடையாது.

    நீங்கள் தூதர் நபிகள் நாயகம் செய்ததை பெரிதாக எடுத்து கொள்கிறீர்களா ? அல்லது நபிகள் ஏன் முத்தமிட்டார் என புரிந்து கொள்ள இயலாத “நபிகள் செய்ததால் மட்டுமே தான் செய்ததாக” கூறும் ஒரு அரசியல் வாதியான உமர் சொல்வதை எடுத்து கொள்கிறீர்களா ?

    உண்மையில் எந்த கல்லிற்கும், கட்டைக்கும் தனியான விஷேஷ இறை சக்தி கிடையாது.(சொர்கத்தில் இருந்து வந்திருந்தாலும்) இதை நான் பதிவிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன்.
    ஆனால் அதை முத்தமிட்டதன் மூலம் நபிகளும், இஸ்லாமியர்களும் தங்களது இதயத்தில் இறை உணர்வை பெற்றார்கள் அல்லவா? இதற்கு பெயர் தான் உருவ வழிபாடு!!!

  8. [...] உருவ வழிபாடு பகுத்தறிவில்லை எனும் ப… [...]

Leave a Reply

பதிவு குழுமங்கள் (Archives)

என்னைப் பற்றி(About Me)

வீரன்- இந்தியன் (Hindusthani)
என் அடையாளம்: முதலில் மனிதன், இந்தியன், தமிழன் பிறகு இந்து.

"மதசார்பின்மை என்பது இந்து மத எதிர்ப்பு அல்ல. தங்களுடைய மதத்தின் உண்மை கருத்துக்களை மட்டும் ஒழுங்காக பின்பற்றி கொண்டு, பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."

Contact Me (தொடர்பு கொள்ள)

வருகையாளர் விபரம் (Blog Stats)

  • 5,639 hits

Who is Hindusthani ?

சிந்துவெளி நாகரீகத்தோன் - இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் அனைத்தும் அடக்கம். Hindustan is an official name of India. Hindusthani is a term to refer an Indian. Hindustan (Tamil:இந்தியா Hindi: हिन्दुस्तान [Hindustān], Urdu: ہندوستان [Hindustān], [ɦɪn̪d̪ʊst̪aːn]) is one of the popular names of India. Hindustan is derived from the Persian word Hindu, which is itself is derived from Sindhu, Sanskrit for the Indus River. This together with a popular suffix -stān, which is also derived from Persian (stan), meaning land gave birth to the word ‘Hindustan’, which was rendered as Hindusthan. Literally, the word means land of the Hindus.